714 பேரின் ஓட்டுநர் உரிமம் தாற்காலிக நீக்கம்: எஸ்.பி. தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 714 பேரின் ஓட்டுநர் உரிமம் தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் 714 பேரின் ஓட்டுநர் உரிமம் தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் கூறினார்.
திருவாரூர் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை மாவட்டத்தில் விபத்தைத் தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு, அவர் பேசியது: மாவட்டத்தில் விபத்தை தடுக்க பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக விபத்து விழிப்புணர்வு குறித்த விடியோ குறும்படம் காவல்துறை சார்பில் தயார் செய்யப்பட்டு வியாழக்கிழமை முதல் வெளியிடப்படுகிறது.
விழிப்புணர்வு படமானது பேருந்து நிறுத்தம், கடைவீதிகள், பள்ளிக் கல்லூரி வளாகங்கள், திரையரங்கம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யோக காவல் வாகனம் ஒன்று எல்ஈடி டிவி மற்றும் ஒலிப்பெருக்கி ஆகியவற்றுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர மாவட்டத்திலுள்ள 29 காவல் நிலைய சரகங்களிலும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி 9,811 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6,814 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தாற்காலிக நீக்கம் செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில்  714 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தாற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விபத்தை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கையில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு விபத்து வழக்கு குறைந்துள்ளது என்றார் மயில்வாகனன்.
நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்சன், டி.எஸ்.பி.க்கள்  சுகுமாறன் (திருவாரூர்), அசோகன் (மன்னார்குடி), மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பலுலுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com