மன்னார்குடி பகுதியில் சனிக்கிழமை (அக். 7) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மன்னார்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மன்னார்குடி, சுந்தரக்கோட்டை, கட்டக்குடி, பருத்திக்கோட்டை, காணூர்,
கோரையாறு, வடபாதிமங்கலம், கூத்தநால்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது.