தூய்மையை பராமரிக்காதவர்களிடமிருந்து ரூ. 2.83 லட்சம் அபராதம் வசூல்: ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் தூய்மையைப் பராமரிக்காத அரசுக் கட்டடங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு  ரூ. 2.83 லட்சம் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் இல. நி

திருவாரூர் மாவட்டத்தில் தூய்மையைப் பராமரிக்காத அரசுக் கட்டடங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு  ரூ. 2.83 லட்சம் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் அருகே விளமல் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அப்பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடையை சுற்றி தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ள பொருள்களை கண்டறிந்து உடனடியாக அப்புறப்படுத்த கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டு விளக்கக் கடிதம் வழங்கினார்.
தொடர்ந்து, திருவாரூர் நகராட்சி 28-ஆவது வார்டுக்குள்பட்ட பகுதிகளில் ஸ்ரீகணேசா கனரக வாகன பழுது நீக்ககம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், தனியார் இனிப்புக் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையிலும், சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் இருந்ததால் உடனடியாக வணிக கிடங்கின் உரிமையாளருக்கு ரூ. 10,000 அபராதமும், தொடர்ந்து அப்பகுதியில் தனியார் கனரக வாகன பழுதுநீக்ககம் வைக்கப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளருக்கு ரூ. 10,000 அபாரதமும்,  ஸ்ரீமுருகா வல்கனைசிங் ஒர்க்ஸ் கடைக்கு ரூ.5,000  அபராதமும், தேவையற்ற கனரக வாகன டயர் வைத்திருந்த செந்தில் என்பவருக்கு ரூ. 100 அபராதமும் என மொத்தம் ரூ. 26,000 அபராதம் விதித்து ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார் .
ஆய்வின்போது, மாவட்டத்தில் 22 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் 9 பேர் டெங்கு காய்ச்சலால் சிகிச்சைப் பெற்று வருகின்ற னர். அதில் 5 பேர் திருவாரூர் மாவட்டம், 3 பேர் நாகப்பட்டினம் மாவட்டம், ஒருவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர்.
டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தூய்மையைப் பராமரிக்காத அரசு கட்டடங்கள் , தனியார் குடியிருப்பு மற்றும் வணிகக் கடைகளுக்கு ரூ. 2.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளது. 1,400 பேருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள்படி குடியிருப்பு பகுதிகளில் சின்டெக்ஸ் நீர்த்தேக்க தொட் டிகளில் கொசுவலையுடன் மூடி வைக்கவேண்டும். புதியக் கட்டடங்கள் கட்டுபவர்கள் பிளாஸ்டிக் டிரம்கள் பெயின்ட் டப்பாக்களை மழைநீர் தேங்காதவாறு அப்புறப்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளை சுற்றி கொசு உற்பத்தியாகாத வகையில் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்றார் நிர்மல்ராஜ்.
இந்த ஆய்வின்போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com