என்.எஸ்.எஸ். முகாம் மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்'

என்.எஸ்.எஸ். முகாம்கள் கிராம மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் கூறினார்.

என்.எஸ்.எஸ். முகாம்கள் கிராம மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் கூறினார்.
திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் அவர் பேசியது:
நாட்டு நலப் பணித் திட்டம் மேல்நிலை வகுப்புகளுக்கு கிடைந்துள்ள நல்ல வாய்ப்பு. அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் என்.எஸ்.எஸ். அமைப்பு தேவை என மாநில அரசு பள்ளிக் கல்வித்துறை, மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு வருகிறது. தொடர் பணி செயல்பாடுகள் வாரம்தோறும் வியாழக்கிழமை கல்வித்துறை வழங்கிய திட்ட அறிக்கைப்படி செயல்பட்டு வருகிறது. காலாண்டு விடுமுறையில் அனைத்து என்.எஸ்.எஸ். அமைப்புகளும் ஏழு நாள் சிறப்பு முகாமை நடத்தி முடிக்க வேண்டும். கிராமச் சூழ்நிலையை கற்றுக்கொண்டு, தேவையறிந்து இலவச கால்நடை சிகிச்சை முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், வேளாண் சார்ந்த மாவட்டமாக இருப்பதால் அது தொடர்பான விழிப்புணர்வு கருந்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
முகாமில் பங்கேற்பதன் மூலம் மாணவர்களின் ஆளுமைத்திறன் வளர்கிறது. கிராம, பொருளாதார சமூக சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.
மாணவர்கள் தங்களுடைய சுயவேலைகளை தானே செய்வது, குழு மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை வளர்க்கிறது. மாணவர்களது முன்னேற்றத்துக்குத் தேவையான கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு கருந்தரங்குகள் நடத்த வேண்டும். ஏழு நாள் முகாமின் காரணமாக அந்த கிராமத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை, முன்னேற்றத்தை என்.எஸ்.எஸ். ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றார் சுவாமிநாதன்.
முகாமில், கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் மலர்விழி இன்பராஜ், நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் ஆர். வெங்கடேசன், நாட்டு நலப் பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் என். ராஜப்பா, பள்ளி முதல்வர் சந்திரா முருகப்பன், நிர்வாகி சின்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற இரா. மணிவண்ணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com