திருவாரூரில் ஒன்றிய அளவிலான துளிர் விநாடி - வினா போட்டி

திருவாரூரில் (தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒன்றிய அளவிலான அறிவியல் இயக்க துளிர் விநாடி - வினா போட்டி அண்மையில் நடைபெற்றது.

திருவாரூரில் (தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒன்றிய அளவிலான அறிவியல் இயக்க துளிர் விநாடி - வினா போட்டி அண்மையில் நடைபெற்றது.
திருவாரூர் ஒன்றியத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இடைநிலைப் பிரிவில் ஜிஆர்எம் பெண்கள் பள்ளி, கூடூர் நடுநிலைப்பள்ளி, வேப்பதாங்குடி நடுநிலைப்பள்ளி முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. உயர்நிலைப் பிரிவில் ஜிஆர்எம் பெண்கள் பள்ளி முதலிடமும் வ.சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 2-ஆம் இடமும் பெற்றன. மேல்நிலைப் பிரிவில் ஜிஆர்எம் பெண்கள் பள்ளி முதலிடம் பிடித்தது. போட்டியின் நிறைவில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றியாளர்கள், அடுத்து திருவாரூர் மாவட்ட அளவில் நடைபெறும் துளிர் விநாடி - வினா போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com