திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 55 லட்சம்: ஆட்சியர்

திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நிகழாண்டு தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 55 லட்சம்

திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நிகழாண்டு தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை சனிக்கிழமை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான் ஆகிய நான்கு இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில், திருவாரூர் விற்பனை நிலையத்தில் 2016 தீபாவளி விற்பனை ரூ. 42 .29 லட்சத்து நடைபெற்றது. 2017 தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு, ஆர்கானிக் காட்டன் சேலைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், சுங்கடி சேலைகள், செட்டிநாடு சேலைகள், காஞ்சிகாட்டன் சேலைகள், , நெகமம் காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், ஜீன்ஸ் டாப்ஸ், சுடிதார் மெட்டீரியல்ஸ், சிறுமுகை, அருப்புக்கோட்டை, பரமக்குடி, உறையூர் வனவாசி, சேலம் பருத்தி சேலைகள், ஜமுக்காளம், போர்வைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், ரெடிமேட் சட்டைகள் உள்ளிட்ட ஏராளமாக வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ-ஆப்டெக்ஸ் வட்டியில்லா சுலப கடன் வசதி அளிக்கிறது. இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தங்க மழைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ரொக்க விற்பனையில் ரூ.2000-க்கு மேல் வாங்குவோருக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் 5 பேருக்கு தலா 8 கிராம் தங்கம், 15 பேருக்கு தலா 4 கிராம் தங்கம் வழங்கப்படவுள்ளன என்றார் ஆட்சியர்.
விழாவில் கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, கோ-ஆப்டெக்ஸ் தஞ்சாவூர் மண்டல மேலாளர் இரா. சுரேஷ்குமார், மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி இரா. சீனிவாசன், மேலாளர் தணிக்கை எம். நிர்மலா, துணை மண்டல மேலாளர் எம். அன்பழகன், திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் கிளை மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com