கூத்தாநல்லூர் பிரதானச் சாலையில் பெரும் பள்ளம்

கூத்தாநல்லூர் பிரதானச் சாலையில், மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

கூத்தாநல்லூர் பிரதானச் சாலையில், மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் உள்ள திருவாரூர்- மன்னார்குடி பிரதானச் சாலை வழியாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பள்ளிக்கூடக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களும், கல்லூரிப்  பேருந்துகளும் இந்த வழியாகச் செல்கின்றன.
இந்நிலையில், விநாயகர் கோயில் அருகே இந்தச் சாலையின் மையப்பகுதியில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், பள்ளத்தின் நடுவே சிவப்பு நிறக் குச்சி ஒன்றை அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் நட்டார். ஆபத்தை விளைவிக்கும் முன்பு இந்தப் பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com