கோயில்களில் நிகழும் துர்நிகழ்வுகளை தடுக்க இன்று வழிபாடு

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் நிகழும் துர்நிகழ்வுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில்

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் நிகழும் துர்நிகழ்வுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் அகல்விளக்கு ஏற்றி கூட்டு வழிபாடு செய்யும் நிகழ்வு வியாழக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மன்னார்குடி செண்டலங்கார செண்பகா மன்னர் ஜீயர் கூறியது: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் அண்மைக்காலமாக துர்நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மக்களின் உடல் நலமும், வளமும் கெடாமல் இருக்க வேண்டி, அமாவாசை நாளான வியாழக்கிழமை (பிப்.15) மாலை மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தின் படித்துறையில் அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி, கூட்டு பிராத்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் பங்கேற்றுப் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com