கோயில்களில் மகா சிவராத்திரி

கூத்தாநல்லூர் பகுதிகளில் வேளுக்குடி, கூத்தாநல்லூர், பாண்டுக்குடி, லெட்சுமாங்குடி, பனங்காட்டாங்குடி உள்ளிட்ட கோயில்களில்

கூத்தாநல்லூர் பகுதிகளில் வேளுக்குடி, கூத்தாநல்லூர், பாண்டுக்குடி, லெட்சுமாங்குடி, பனங்காட்டாங்குடி உள்ளிட்ட கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
வேளுக்குடி அன்னை அங்காளப் பரமேஸ்வரி கோயிலில், நள்ளிரவு அலங்கரிக்கப்பட்ட இருளன், பெரியாச்சி  வீதியுலா  வந்து பக்தர்களுக்கு  காட்சியளித்தார். தொடர்ந்து புதன்கிழமை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். 
கோயில் பூசாரி, அகோர வீரபத்திர சுவாமி வேடமிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி, மயான ருத்திரராய் மயானத்துக்குச் சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர்.  
கூத்தாநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர், மங்களாம்பிகைக்கு மஞ்சள் பொடி,  பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட  திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, லெட்சுமாங்குடி  கம்பர் தெருவிலுள்ள நீலோத்தம்பாள் சமேத நீலகண்டேசுவரர்  கோயில், பாண்டுக்குடி  உமாபதீசுவரர் கோயில், பனங்காட்டாங்குடி பெரியநாயகி அம்மன், மகா மாரியம்மன் கோயில்,  98 மேலராதா நல்லூரில் மாரியம்மனுக்கும், வடகோவனூரில் மீனாட்சி  அம்பிகா உடனுறை சொக்கநாதர் சுவாமிக்கும் சிவராத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com