சாலை மேம்பாட்டுக்கு ரூ.19.58 கோடி நிதி ஒதுக்கீடு: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தகவல்

மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.19.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.19.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட  அறிக்கை: மன்னார்குடி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்து பள்ளமும், மேடாக உள்ளது, இதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை மனு அளித்திருந்தினர்.
இதுகுறித்து சட்டப் பேரவையில் பலமுறை பேசியதுடன்,நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததையடுத்து, மன்னார்குடி நகராட்சிப் பகுதியில் காளவாய்க்கரையிலிருந்து தங்கமணி கட்டடம், காமராஜர் சிலை வரை ரூ. 1.50 கோடி, மேலவாசல், காரிக்கோட்டை சாலைக்கு ரூ.1.55 கோடி, நெம்மேலி கிராமச் சாலைக்கு ரூ.1.22 கோடி, ராஜப்பையன்சாவடி, ராயபுரம் சாலை 3 கிலோ மீட்டருக்கு ரூ.1.63 கோடி, மாநில நெடுஞ்சாலை 146-இல் மன்னார்குடி, சேதுபாவாசத்திரம் சாலைக்கு 7 கிலோ மீட்டருக்கு ரூ. 8 கோடி, தேவங்குடி கிராமச் சாலைக்கு ரூ.1.5 கோடி, சித்தமல்லி, பன்னிமங்கலம் நெடுஞ்சாலை 3 கிமீக்கு ரூ.1.63 கோடி.
தளிக்கோட்டை, மேலதளிக்கோட்டை சாலைக்கு ரூ.46 லட்சம், காஞ்சிக்குடிக்காடு, கருவாக்குறிச்சி சாலைக்கு ரூ.54 லட்சம், முன்னாவால்கோட்டை, செட்டிசத்திரம் சாலைக்கு (நெடுஞ்சாலை) ரூ.91 லட்சம், முன்னவால்கோட்டை,செட்டிசத்திரத்தில் பாலம் அமைந்துள்ள சாலைக்கு ரூ.10 லட்சம், வாளாச்சேரி, வெள்ளக்குடி சாலைக்கு ரூ.86 லட்சம், எடகீழையூர், எடமேலையூர்- காரக்கோட்டை சாலைக்கு ரூ.13 லட்சம் என மொத்தம் ரூ.19.58 கோடி சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 மேலும் 54-நெம்மேலி சாலை, உள்ளிக்கோட்டை பேட்டை, துளசேந்திரபுரம் சாலை, வடுவூர் சாத்தனூர், சமையன்குடிக்காடு சாலை ஆகியவற்றை மேம்படுத்திடவும் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையிடம் வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,விரைவில் அவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com