நேதாஜி கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நேதாஜி கல்விக் குழுமங்களின் தாளாளர் சு. வெங்கட்ராஜலு தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவாரூர் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி பேசியது: இன்றைய குடும்பங்களும், உறவுகளும் பிணைப்பின்றி உள்ளன. நவீன அறிவியல் முன்னேற்றம் வாழ்வை சிக்கலாக்கி உள்ளது. அதை சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுபோன்ற விழாக்களை உறவுகளோடு இணைந்து கொண்டாடி நம் உறவுகளை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாணவியருக்கான கோலப்போட்டி, உறியடித்தல் போட்டி, பேராசிரியர்களுக்கான பந்து விளையாட்டுப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, கரகம், காவடி, கும்மி போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கல்லூரி முதல்வர் எஸ். மாலதி, மஹாராஜா சில்க் ஹவுஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அப்துல் ரஹிம், ரயில்வே ஒப்பந்ததாரர் ரெங்கதாஸ், பேராசிரியர் கனகசுந்தரம், லெட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் ரேவதி வெங்கடராஜலு, நேதாஜி மெட்ரிக் பள்ளி நிர்வாகி சரண்யா சுந்தர்ராஜூ, துணை முதல்வர்கள் இரா. அறிவழகன், பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com