திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நால்வர் கைது: 68 பவுன் நகை,17 இருசக்கர வாகனங்கள் மீட்பு

மன்னார்குடி அருகேயுள்ள, பெருகவாழ்ந்தான் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நால்வரை

மன்னார்குடி அருகேயுள்ள, பெருகவாழ்ந்தான் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நால்வரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 68 பவுன் நகை, 17 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான போலீஸார், முத்துப்பேட்டை பிரதானசாலை, எடையூர் அருகே சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினர். 
இதையடுத்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை மேலக்காட்டைச் சேர்ந்த, கார்த்தி (26), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24), பாலமுருகன் (26) என்பதும், இவர்கள் பெருகவாழ்ந்தான் பகுதியில் பல்வேறு இடங்களில் வீடு ,கடைகள் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடியதும், வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. மேலும், இத்திருட்டு சம்பவத்தில் மன்னார்குடி,மேலவீதி ராஜேஷ் (22)உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கார்த்திக், சதீஷ், பாலமுருகன், ராஜேஷ் ஆகிய நால்வரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 68 பவுன் நகை, 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 பின்னர், கார்த்திக் உள்பட்ட நான்கு பேரும், மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com