அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஆணை எண் 56-ஐ ரத்து செய்யக் கோரி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு ஆணை எண் 56-ஐ ரத்து செய்யக் கோரி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஏ. இளமாறன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் யு. குமரவேல், ஜி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கோ. கௌதமன் தொடக்க உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் ஏ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் கண்டன உரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வன் நிறைவுரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எம். மாதவராஜ், செயலாளர் பி. பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்திலான நடவடிக்கையை ரத்து செய்வது, அரசுப் பணி நியமனத்தில் அவுட்சோர்ஸ் முறை கொண்டு வரும் நடைமுறையை ரத்து செய்வது, பணியிடங்களை குறைக்கின்ற நடைமுறையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com