பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

நீடாமங்கலம் வட்டாரத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வட்டாரத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ந. சம்பத், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அ. ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ அறியச் செய்தல், குழந்தைகளின் உரிமைகள், தரமான கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கருத்தாளர்களாக இருந்து பயிற்சியளித்தனர். 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி
ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்குக் கல்விக் கற்பிப்பதற்கான பாடத்திட்ட தகவமைப்புப் பயிற்சி நடைபெற்றது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அ. ரவி பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
இயன்முறை மருத்துவர் கௌசல்யா, சிறப்பாசிரியர் சுபாலெட்சுமி, சலோமி, மதியழகி, ஜென்னிமார்க்ஸ், அருண்பாலாஜி ஆகியோர் பயிற்சியளித்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் குணாதிசயங்கள், நடத்தையை மேம்படுத்துதல், கற்பித்தல், பாடத்திட்டத்தை அவர்களுக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்துக் கற்பித்தல், உபகரணங்களை பயன்படுத்திக் கற்பித்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்வி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பார்வையிட்டார். உயர், தொடக்கநிலை ஆசிரியர்கள் 30 பேர் பயிற்சிப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com