மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

திருவாரூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ. தனமணி தலைமை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் ஆர். சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, முகாமில் கண்டறியப்பட்ட 242 குழந்தைகளுக்கு கால்தாங்கி உபகரணம், சிபி நாற்காலி, 3 சக்கர நாற்காலி, ரொலேட்டர், முழங்கை ஊன்றுகோல் காதொலிக் கருவிகள் என ரூ. 8.4 லட்சம் மதிப்பில் 376 உபகரணங்கள், 232 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ. பாஸ்கர், இயன்முறை மருத்துவர்கள், சிறப்பாசிரியர்கள், உதவித் திட்ட அலுவலர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com