உயர்நீதிமன்றம் உத்தரவு: திருக்கோயில்களில் மாவட்ட நீதிபதி ஆய்வு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயில், அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயில், அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில், உயர்நீதிமன்ற உத்தரவுபடி திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிபதி கலைமதி திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மாவட்ட நீதிபதிகள் தங்களது நீதிமன்ற எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் நேரடி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிபதி கலைமதி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் உள்பிராகாரங்கள், கருவறைகள் மற்றும் உலோகச் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மரகத லிங்கம்,  தீர்த்தவிடங்க தியாகராஜர் சன்னிதி, திருமடப்பள்ளி, அன்னதானக் கூடம்,  நந்தவனம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயில் செயல் அலுவலர் என்.முருகையன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் கோயில் குறித்த விவரங்களை நீதிபதியிடம் கூறினர்.
 பின்னர், அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில் நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com