காற்று மாசு தடுப்பு செயல் திட்டம்: ஹரியாணா, பஞ்சாபுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டிப்பு

காற்று மாசு தடுப்பு தொடர்பாக ஹரியாணா, பஞ்சாப் மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு தடுப்பு தொடர்பாக ஹரியாணா, பஞ்சாப் மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்று மாசு தொடர்பாக செயல்படுத்தக் கூடிய தீர்வை தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் , ராஜஸ்தான் மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நேரில் ஆஜராகி அளிக்க வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தில்லி காற்று மாசு தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, பஞ்சாப், ஹரியாணா அரசுகள் சார்பில், "காற்று மாசு தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு கடுமையான அளவில் நீடித்தால், கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்துதல், குப்பைகள் எரிக்கப்படுவது தடுத்தல், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசுவைக் கண்காணித்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன' என்று கூறப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த தீர்ப்பாய அமர்வு, "காற்று மாசு கடுமையான அளவில் நீடித்தால், 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏன்? காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நீங்கள் தெரிவித்திருக்கும் செயல் திட்டத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காற்று மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகளை மட்டுமே பஞ்சாப், ஹரியாணா அரசுகள் தங்கள் செயல்திட்டங்களாக கூறுகின்றன. புதிதாக எதையும் தெரிவிக்கவில்லை' என்று கூறியது.
இதையடுத்து, தனியார் வாகன கட்டுப்பாடு திட்டம் தொடர்பாக தில்லி அரசின் நிலை என்ன என்று தீர்ப்பாய அமர்வு கேள்வி எழுப்பியது. 
அதற்கு, தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "சில சலுகைகளுடன் தில்லி அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறது. இதுதொடர்பாக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com