மின் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை  காவல் துறையினருக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுரை

தில்லியில் மின் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

தில்லியில் மின் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
தில்லியில் நடைபெறும் மின் திருட்டு சம்பவங்களால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணத்தை மின் விநியோக நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமன் சூரி என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மின் விநியோக நிறுவனங்கள் மறுத்துன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, தில்லி காவல் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மின் திருட்டு புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்துள்ளோம். 
நிகழாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை 3,853 புகார்களை மின் விநியோக நிறுவனங்கள் அளித்துள்ளன. அதில், 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மின் திருட்டு வழக்குகளை விசாரிக்க தனி காவல் நிலையம் அமைப்பது நிர்வாக ரீதியாக சாத்தியமல்ல. எனினும், மின் திருட்டு சம்பவங்கள் குறித்து அனைத்து காவல் நிலையங்களும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் நீங்கள் அதிக வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டியிருக்கும். 
மேலும் கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டியிருக்கும்' என்று நீதிபதிகள் தெரிவித்ததனர். இந்த வழக்கை ஜனவரி 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com