இரவுக் குடில் இடிப்பு: விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

நிஜாமுதீன் பகுதியில் செயல்பட்டு வந்த பெண்கள், குழந்தைகளுக்கான இரவுக் குடில் இடிக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த தில்லி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நிஜாமுதீன் பகுதியில் செயல்பட்டு வந்த பெண்கள், குழந்தைகளுக்கான இரவுக் குடில் இடிக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த தில்லி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்கக் கோரி தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), தில்லி போலீஸ் ஆகியவற்றுக்கு தில்லி மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கு தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு அளித்துள்ள நோட்டீஸில், 'மிகவும் பின்தங்கியவர்களும், ஆதரவற்றவர்களும் தான் இரவுக் குடில்களில் தங்கி வருகின்றனர். அதுவும் நிஜாமுதீன் திர்காவுக்கு அருகே இருந்த இந்த இரவுக் குடிலில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் இருந்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தில்லியில் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண்களை வீடில்லாமல் சாலையில் நிற்க வைத்துள்ளனர். இது அவர்களுக் எதிரான குற்றங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமையாகும். ஆகையால், இந்த இரவுக் குடிலை இடித்தற்கான காரணம் என்ன? அங்கு திங்கியிருந்தவர்களின் மறுவாழ்வுக்காக தில்லி மேம்பாட்டு ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தில்லி போலீஸுக்கு அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸில், 'இந்த இரவுக் குடில் இடிப்பின் போது அங்கு பணியில் ஈடுபட்டிருந் காவல் துறை அதிகாரிகளின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டும். அங்கிருந்த பெண்கள் மீது தடியடி நடத்த யார் உத்தரவிட்டது' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேபோன்று தில்லி நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்துக்கும் (டியுஎஸ்ஐபி) தில்லி மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், 'நீதிமன்ற உத்தரவின்படி, தில்லியில் இரவுக் குடில்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளன. இரவுக் குடில்களில் தங்குபவர்களுக்கு என்னென்ன மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com