மெட்ரோ கட்டண உயர்வு விவகாரம்: உயர் நீதிமன்றம் தலையிட மறுப்பு

தில்லி மெட்ரோ ரயில் பயணக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தில்லி மெட்ரோ ரயில் பயணக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தில்லி மெட்ரோ ரயில் கட்டணங்கள், கடந்த மே மாதம் அதன்பிறகு அக்டோபர் மாதம் என இரு கட்டங்களாக உயர்த்தப்பட்டன. மெட்ரோவின் 4-ஆவது கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே,  இந்த பரிந்துரைகளை ரத்து செய்யக் கோரி, அமர் வைத் என்ற சட்டப் படிப்பு மாணவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், "மெட்ரோ ரயில் கட்டணங்களை திருத்தியமைப்பதற்காக அமைக்கப்பட்ட 4-ஆவது கட்டண நிர்ணயக் குழு, பயணக் கட்டணங்களை இருகட்டங்களாக 100 சதவீதம் அளவுக்கு உயர்த்த பரிந்துரைத்தது. அதன்படி, கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. 4-ஆவது கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் நியாயமற்றவை. விதிமுறைகளுக்கு புறம்பானவை. மேலும், பயணிகளின் நலனுக்கு எதிரான அந்த பரிந்துரைகளை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்தி, டிஎம்ஆர்சி மேற்கொண்ட நடவடிக்கையில் தலையிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் மனு அளிக்குமாறு அந்த மாணவருக்கு அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com