குடியரசுத் தலைவர் மாளிகையை வாரத்தில் 4 நாள்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்

தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வியாழக்கிழமை (நவம்பர் 23) முதல் வாரத்தில் நான்கு நாள்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வியாழக்கிழமை (நவம்பர் 23) முதல் வாரத்தில் நான்கு நாள்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவரின் ஊடகச் செயலர் அசோக் மாலிக் புதன்கிழமை தெரிவித்ததாவது:
 குடியரசுத் தலைவர் மாளிகை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வாரத்தில் வியாழக்கிழமை,  வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு தினங்கள்  காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை (அரசு விடுமுறைகள் நீங்கலாக) திறந்துவிடப்படும். வியாழக்கிழமை (நவம்பர் 23) முதல் இந்த புதிய முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது.
ராஜபாதையில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில் 2,  நுழைவு வாயில் 37 (ஹக்மி மை மார்க்),  நுழைவு வாயில் 38 (சர்ச் ரோடு) ஆகியவற்றின் வழியாக பார்வையாளர்கள் நுழையவும், வெளியேறவும் அனுமதிக்கப்படுவர்.
பொதுமக்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட  h‌t‌t‌p://‌r​a‌s‌h‌t‌r​a‌p​a‌t‌i‌s​a​c‌h‌i‌v​a‌l​a‌y​a.‌g‌o‌v.‌i‌n/‌r​b‌t‌o‌u‌r எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.  மாளிகையைப் பார்வையிடுவதற்கான பதிவுக் கட்டணம் ஒருவருக்கு ரூ.50 ஆகும்.  8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. 
பார்வையிட வரும் இந்தியர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். வெளிநாட்டினர் கடவுச்சீட்டை எடுத்து வர வேண்டும்.  இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய பார்வையாளர்கள் மேலாண்மைப் பிரிவை 011-23013287, 23015321 (எக்ஸ்டென்ஸன் எண் 4662) எனும் தொலைபேசி எண்களிலும், r‌e​c‌e‌p‌t‌i‌o‌n-‌o‌f‌f‌i​c‌e‌r@‌r​b.‌n‌i​c.‌i‌n எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அசோக் மாலிக் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com