பன்றிக்காய்ச்சல்:பள்ளிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தல்

பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தில்லி அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள், அதனைப் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்கள் காலை ஒன்றுகூடும் கூட்டத்தின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
சுகாதாரத்தைப் பேணி காப்பது குறித்தும், மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ள மாணவர்கள் முழுமையாக குனமடைந்தபிறகே பள்ளிகளுக்கு வர வேண்டும். மாணவர்கள் எப்போது தங்கள் கைகளை கழவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தும்பல், இரும்பல் போன்றவற்றை சரியான முறையில் கையாள வேண்டியது எப்படி என்பதையும் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சலால் 1,586 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com