முன்னாள் கவுன்சிலரின் கணவர் சுட்டுக் கொலை

தேசியத் தலைநகர் வலயப் பகுதியான காஜியாபாதில் முன்னாள் கவுன்சிலரின் கணவர், அடையாளம் தெரியாத நபர்களால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேசியத் தலைநகர் வலயப் பகுதியான காஜியாபாதில் முன்னாள் கவுன்சிலரின் கணவர், அடையாளம் தெரியாத நபர்களால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து, காஜியாபாத் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஹெச்.என்.சிங் கூறியதாவது:
இச்சம்பவம் மகாராஜ்பூர் கிராமத்தில் வியாழக்கிழமை நண்பகலில் நிகழ்ந்தது. முன்னாள் கவுன்சிலரின் கணவரான ஹாஜி ஹாரூன் (60), 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் 4 முறை சுடப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஹாரூனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு சொத்து பிரச்னை தொடர்பாக இரு தரப்பினர் அந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் கூடியிருந்தனர். அப்போது, ஹாஜி ஹாரூனின் நண்பரான ஜாகிர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே, இரு சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்பட, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று ஹெச்.என்.சிங் கூறினார்.
5 வயது சிறுமி பலாத்கார வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றம்
புது தில்லி, செப். 15: தில்லியின் காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை, தில்லி போலீஸின் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை கூறினர்.
கடந்த வாரம், ஷாதரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி, பள்ளி அலுவலக உதவியாளரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் அன்றே அந்த உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தில்லி காவல்துறையினர் உரிய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காந்திநகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய், தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெற அந்த வழக்கை தில்லி காவல்துறையிடம் இருந்து, குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யக் கோரி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கை தொடர்பு கொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், வழக்கு விசாரணையை ஷாதரா மாவட்ட காவல்துறையிடம் இருந்து குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்து புதன்கிழமை இரவு நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, இந்த வழக்கில் பள்ளி தரப்பில் அலட்சியம் இருந்ததாக கூறப்படுவது, சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டாம் என ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுவது ஆகியவை குறித்து விசாரிக்கவுள்ளதாக குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com