என்சிஆர் பகுதியில் இரு ரெளடிகள் சுட்டுக் கொலை

தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் (என்சிஆர்) உள்ள நொய்டா, காஜியாபாத் ஆகிய இடங்களில் இரு வேறு சம்பவங்களில் போலீஸாருக்கும், ரெளடிகளுக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற

தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் (என்சிஆர்) உள்ள நொய்டா, காஜியாபாத் ஆகிய இடங்களில் இரு வேறு சம்பவங்களில் போலீஸாருக்கும், ரெளடிகளுக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ரௌடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து ஷாகிபாபாத் காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது:
தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், காஜியாபாதில் குழந்தையை மிரட்டி பெற்றோரிடம் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த சிலர் பணத்தை பெறுவதற்காக சென்று கொண்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, காஜியாபாத் காவல் துறையின் சோதனைச் சாவடி மையங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது அதிகாலை 2 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வந்த ரெளடிகள் சிலர் சோதனைச் சாவடியில் இருந்த போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதில் உதவி ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸாரும் திருப்பிச் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடை யே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ரெளடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றார் அவர்.
நொய்டா: இதேபோன்று நொய்டாவில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து நொய்டா மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அருண் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு செல்வதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, கண்காணிப்பு, ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, நொய்டா 58-ஆவது செக்டர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை மறித்து சோதனையிட முற்பட்டோம். அப்போது அவர்கள் திடீரென போலீஸாரை நோக்கி சுடத் தொடங்கினர்.
போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இதில் மோட்டார்சைக்களில் வந்த பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற மூவரும் தப்பிக்க முயன்றனர். இருப்பினும் இவர்களில் இருவர் பிடிபட்டனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com