நிஜாமுதீன் பகுதியில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

தெற்கு தில்லியில் உள்ள ஹிமாயூன் கல்லறை, நிஜாமுதீன் அமிர் குஸ்ரோ பூங்கா, சுந்தர் நர்ஸரி வளாகம் ஆகிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தெற்கு தில்லியில் உள்ள ஹிமாயூன் கல்லறை, நிஜாமுதீன் அமிர் குஸ்ரோ பூங்கா, சுந்தர் நர்ஸரி வளாகம் ஆகிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு தில்லியில் உள்ள வரலாற்று புகழ்மிக்க ஹிமாயூன் கல்லறை, அமிர் குஸ்ரோ பூங்கா, சுந்தர் நர்ஸரி வளாகம் ஆகிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஆய்வு மேற்கொண்டார்.
நிஜாமுதீன் பஸ்தி, ஹிமாயூன் கல்லறை ஆகியவற்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் மதுரா ரோடு, லாலா லஜ்பத் ராய் மார்க், லோதி ரோடு ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து, நிஜாமுதீன் பஸ்தியை இணைக்கும் முக்கியச் சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் உர்ஸ் பண்டிகையை முன்னிட்டு வாகன நிறுத்த மையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மூன்று வாரங்களுக்குள் ஆராயுமாறு தெற்கு தில்லி மாநகராட்சிக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
அப்போது, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது உருவாக்கப்பட்ட சுனேரி நாலா வாகன நிறுத்த மையத்தை பயன்படுத்த தெற்கு தில்லி மாநகராட்சிக்கு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டார்.
2018, ஜனவரியில் கொண்டாடப்படவுள்ள உர்ஸ் பண்டிகையை முன்னிட்டு நிஜாமுதீன் பகுதியில் தேவையான கழிப்பறைகள், தங்குமிட வசதி, சமையல் கூடங்கள் ஆகியவற்றை ஆண்டின் இறுதிக்குள் ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் . இது தொடர்பான இறுதி செய்யப்பட்ட திட்டங்கள் குறித்த அறிக்கையை அக்டோபர் 8-ஆம் தேதிக்குள்அளிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
சுந்தர் நர்ஸரி வளாகம்: இதைத் தொடர்ந்து, நிஜாமுதீன் பகுதியில் உள்ள சுந்தர் நர்ஸரி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட துணைநிலை ஆளுநர், அங்கு பாராமரிக்கப்பட்டு வரும் பாரம்பரிய கிணற்றைப் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, சுந்தர் நர்ஸரி வளாகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர், தில்லி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள், தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள், தில்லி குடிநீர் வாரிய அதிகாரிகள், இந்தியதொல்லியல் துறை அதிகாரிகள், அகா கான் டிரஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com