பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது?: ரயான் பள்ளிக்கு சிபிஎஸ்இ நோட்டீஸ்

பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை பாதுகாப்புக் கூட அளிக்காத காரணத்தால் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என்று ரயான் பள்ளிக்கு சிபிஎஸ்இ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை பாதுகாப்புக் கூட அளிக்காத காரணத்தால் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என்று ரயான் பள்ளிக்கு சிபிஎஸ்இ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், 2-ம் வகுப்பு மாணவர் பிரதுமன் தாக்குரின் சாவை பள்ளி தவிர்த்திருக்கலாம் என்றும் அந்த நோட்டீஸில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அந்த நோட்டீஸில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையையே பள்ளி பேருந்து வாகன ஓட்டுநர்களும், அவர்களின் உதவியாளர்களும் பயன்படுத்தி உள்ளனர். பள்ளியின் சுவரில் உள்ள துளைகள் வயர்களால் கட்டி அடைக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாக யார் வேண்டுமானாலும் பள்ளிக்குள் சுலபமாக வந்து செல்லலாம்.
இவை எல்லாம் மாணவர்களின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளாக கள ஆய்வு நடத்திய சிபிஎஸ்இ விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு விவகாரத்தில் ரயான் பள்ளி அலட்சியமாக செயல்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் முன்னெச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டிருந்தால் பிரதுமன் கொலையைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால், சிபிஎஸ்இயால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் செயல்படுத்தவில்லை.
இந்தச் சம்பவம் நடைபெற்ற உடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டியது, மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டியது, சிபிஎஸ்இ-க்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டியது பள்ளியின் கடமை. ஆனால், ரயான் பள்ளி இவற்றில் எதையும் செய்யவில்லை.
ஆகையால், சிபிஎஸ்இ அளித்த அங்கீகாரத்தை ஏன் திரும்ப பெறக் கூடாது என்பது குறித்து 15 நாள்களுக்குள் பள்ளி அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com