மாற்றுத்திறனாளிகள் மசோதா: துணைநிலை ஆளுநருக்கு பாஜக கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் மசோத நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு தில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்த

மாற்றுத்திறனாளிகள் மசோத நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு தில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் சட்ட மசோதா குறித்த இணக்க அறிக்கையை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 12 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக சட்ட திட்டங்களை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வகுக்க முடியும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவிக்கிறது. இருப்பினும், தில்லி போன்ற யூனியன் பிரதேசத்துக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்ற நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறது. இந்நிலையில், தில்லியில் மாற்றுத்திறனாளிகள் சட்ட மசோதவை நிறைவேற்றினால் ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்குப் பயனளிப்பதாக இருக்கும்.
மாற்றுத்திறனாளிகள் மசோதா 2016-இன் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பொறுப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை உணர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலன், உரிமைகள் பாதுகாக்கும் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற தில்லி அரசு முன்வர வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தில்லி அரசு மாற்றுத்திறனாளிகள் மசோதா நிறைவேற்றப்படுவதை துணைநிலை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் என்றார் விஜேந்தர் குப்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com