அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகள்: துணை முதல்வர் ஆய்வு

தில்லி அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகளை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

தில்லி அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகளை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
இது குறித்து தில்லி கல்வித் துறை உயரதிகாரி கூறியதாவது:
தில்லி அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் வகுப்பறை, விளையாட்டு மைதானம், கூட்ட அரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைபுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிழக்கு தில்லி மயூர் விஹார் பேஸ்-2-இல் பட்பர்கஞ்ச், மேற்கு வினோத் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தில்லி அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான நீச்சல் குளப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, இந்த உள்கட்டமைப்புப் பணிகளை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குறித்து கேட்டறிந்தார்' என்றார்.
இந்த ஆய்வின் போது தில்லி பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com