மல்லப்பகுண்டா மல்லேஸ்வரர் கோயிலில் 2.40 லட்சம் ருத்ராட்சங்களால் வழிபாடு

ஆந்திர மாநிலம், குப்பம் அருகே அம்மாநில அரசால் கட்டப்பட்டு வரும் சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, அங்குள்ள பெரிய

ஆந்திர மாநிலம், குப்பம் அருகே அம்மாநில அரசால் கட்டப்பட்டு வரும் சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, அங்குள்ள பெரிய சிவலிங்கத்துக்கு 2.40 லட்சம் ருத்ராட்சங்களால் செவ்வாய்க்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது.
தமிழகம்-ஆந்திரம்-கர்நாடகம் ஆகிய 3 மாநில எல்லையில் குப்பம் தொகுதியில் மல்லப்பகுண்டா மலை மீது மல்லேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்காக கோயில் மண்டபம், சமையல் கூடம் உள்ளிட்டவற்றுக்காக ரூ. 50 லட்சம் செலவில் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மலை கோயிலுக்கு செல்ல ரூ. 8 கோடியில் சாலை அமைக்கப்பட உள்ளது. 
இக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேர் உலா நடைபெற்றது. மேலும், அங்குள்ள பிரம்மாண்டமான சிவலிங்கத்துக்கு 2.30 லட்சம் எண்ணிக்கையிலான ருத்ராட்சங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலவர் மல்லேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குப்பம் தொகுதி பொறுப்பாளரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளருமான மனோகர் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com