தனியார் நிறுவன லாரியை மறித்து கொள்ளை:  2 பேர் கைது; ரூ.20 லட்சம் பொருள்கள் மீட்பு

தில்லியில் இணையதளம் மூலம் நுகர் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் லாரியை மடக்கி செல்லிடப்பேசி

தில்லியில் இணையதளம் மூலம் நுகர் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் லாரியை மடக்கி செல்லிடப்பேசி, துணிகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் கொள்ளைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜி.ராம் கோபால் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: இணையதளம் மூலம் நுகர் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் சேமிப்புப் கிடங்கில் இருந்து லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜீவ் என்பவர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி நள்ளிரவு சென்று கொண்டிருந்தார். 
தில்லி துவாரகா பகுதியில் உள்ள துல்சிராஸ் சௌக் பகுதிக்கு லாரி வந்த போது வாகனங்களில் வந்த நான்கு பேர் லாரியை மறித்தனர். பிறகு லாரியின் ஓட்டுநர் ராஜீவை கட்டிப் போட்டனர். லாரியில் இருந்த செல்லிடப்பேசிகள், துணிகள், காலணிகள் உள்ளிட்டவை அடங்கிய பிளாஸ்டிக் பெட்டிகளை கொள்ளையடித்து வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றி க்கொண்டு தப்பினர்.
இச்சம்பவத்தில்  தொடர்புடைய இருவர் நரேலா பகுதியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் அப்பகுதிக்குச் சென்று இருவரைக் கைது செய்தனர். 
விசாரணையில் அவர்கள் நரேலா போர்கர் பகுதியைச் சேர்ந்த குட்டு குமார் (22), ரங்புரி பகுதியைச் சேர்ந்த கௌரவ் குமார் (22) ஆகியோர் என்பது தெரிய வந்தது. 
இதையடுத்து, போர்கர் பகுதியில் ஒரு வாடகைக் கடையில் மறைத்து வைத்திருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com