மதுக்கடை திறப்பதை கண்டித்து மக்கள் நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து, குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து, குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, திருமால்நகர் சந்திப்பில் இயங்கும் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். சாராள் தக்கர் மகளிர் கல்லூரி அருகில் புதிதாக மதுக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் என்.ஜி.ஓ. காலனி ஜெபா கார்டன் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் வி. பொன்னுராஜ் தலைமை வகித்தார். செயலர் டி. கோபாலன் முன்னிலை வகித்தார். இணைச் செயலர்கள் எஸ். ரவிசண்முகம், பி. தியாகராஜன், காமாட்சிநகர் மக்கள் நலச் சங்க நிர்வாகி பிரபா, துணைத் தலைவர் ஆர். நடராஜன், அப்துல்ரஹ்மான் மக்கள் நலச் சங்கச் செயலர் நவாஸ், தலைவர் மாணிக்கராஜ், துணைச் செயலர் எஸ். முத்துசாமி,
அழகர்நகர் மக்கள் நலச்சங்கத் தலைவர் வீ. பழனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிர்வாகி என். சங்கரன், திருமால்நகர் மக்கள் நலச் சங்கச் செயலர் சங்கரன், மகிழ்ச்சிநகர் நலச் சங்கச் செயலர் தர்மராஜ், ஜமால்நகர் மக்கள் நலச்சங்கச் செயலர் சுப்பிரமணியன், பாரதிநகர் மக்கள் நலச் சங்கத் தலைவர் துரைராஜ், இணைச் செயலர் வைகுண்டமணி, ஜெயாநகர் நலச் சங்கச் செயலர் சம்மனசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com