பாளை. தூய திருத்துவ பேராலயத்தில் சிறப்பு ஆராதனை: பிரதம பேராயர் பங்கேற்பு

பாளையங்கோட்டை தூய திருத்துவ பேராலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் பங்கேற்றார்.

பாளையங்கோட்டை தூய திருத்துவ பேராலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் பங்கேற்றார்.
தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டிலம் சார்பில் தென்னிந்தியாவில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு இறைப்பணி செய்ய அர்ப்பணிக்கப்பட்ட இறை ஊழியர்களை நினைவுகூரும் வகையில் இந்த சிறப்பு ஸ்தோத்திர ஜெப ஆராதனை நடைபெற்றது.
திருநெல்வேலி திருமண்டில பேராயர் ஜெ.ஜெ.கிறிஸ்துதாஸ் வரவேற்றார்.  தென்னிந்திய திருச்சபைகளின் பிரதம பேராயர் தாமஸ் கே.ஓமன் தலைமை வகித்து விவிலிய செய்தி அளித்து பேசியது:
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் தென்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இறைப்பணிக்காக அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறார்கள். கிறிஸ்தவ மதத்திற்காக மொழிபெயர்ப்பு, நூல்கள் தயாரிப்பு பணிகளைச் செய்வதோடு, ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவம், கல்வி கிடைக்க அரும்பாடுபடுகிறார்கள். இது பாராட்டுக்குரியதோடு, அதனை கிறிஸ்தவர்கள் நினைவுகூர்ந்து ஜெபிக்க வேண்டியது அவசியம் என்றார்.
சினாட் பொதுச்செயலர் ரத்தினஹர தாமஸ் சதானந்தா, கெளரவ பொருளாளர் ராபர்ட் புருஸ், சென்னை திருமண்டில பேராயர் ஜெயராஜ் ஜார்ஜ் ஸ்டீபன்,  பேராயர்கள் கோவை தீமோத்தி ரவீந்தர், வேலூர்  ராஜவேலு,  மதுரை- ராமநாதபுரம் எம்.ஜோசப், திருச்சி  ஜி.பால்வசந்தகுமார், திருவனந்தபுரம்  ஏ.தர்மராஜ் ரசலாம் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயர் தேவசகாயம், லே செயலர் எஸ்.டி.கே.ராஜன், ஆகியோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி திருமண்டில நிர்வாகக் குழுவைச் சேர்ந்த கே.சாமுவேல் பாஸ்கர்ராஜ், ஜெயக்குமார், உறுப்பினர் சேவியர், ஜோஸ் ஜாக்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com