மகளிர் கூடைப்பந்து: கேரள, செகந்தராபாத் அணிகள் வெற்றி

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டியில் 2 ஆவது நாளான சனிக்கிழமை கேரள மின்வாரிய அணி, செகந்தராபாத் அணி, தென்னக ரயில்வே அணிகள் வெற்றி

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டியில் 2 ஆவது நாளான சனிக்கிழமை கேரள மின்வாரிய அணி, செகந்தராபாத் அணி, தென்னக ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.
திருநெல்வேலி பாக் கூடைப்பந்து அகாதெமி சார்பில் ஹரிதா நினைவுக் கோப்பைக்கானஅகில இந்திய அளவிலான மகளிர் கூடைப்பந்துப் போட்டிகள் சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியை மாவட்ட கூடைப்பந்துக் கழகச் செயலர் தங்க மாரிமுத்து தொடங்கிவைத்தார். கேரள மாநில மின்வாரிய அணியும், கேரள போலீஸ் அணியும் விளையாடின. இதில் கேரள மின்வாரிய அணி 47 புள்ளிகள் பெற்று முதலிடமும், போலீஸ் அணி 28 புள்ளிகள் பெற்று 2 ஆவது இடமும் பெற்றன.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது போட்டியை தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலர் சுஜேஸ்ராஜா தொடங்கிவைத்தார். இதில் அமைப்பின் தலைவர் கே. மோகன், செயலர் கோகுல், விஜயா வங்கி மேலாளர் பிரம்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் செகந்தராபாத் தென் மத்திய ரயில்வே அணி 81 புள்ளிகள் பெற்று முதலிடமும், சத்தீஸ்கர் மாநில அணி 66 புள்ளிகள் பெற்று 2 ஆவது இடமும் பெற்றன. 3 ஆவது போட்டியில் தென்னக ரயில்வே அணியும், சென்னை அரைஸ் ஸ்டீல் அணியும் விளையாடின. இதில், தென்னக ரயில்வே அணி 73 புள்ளிகள் பெற்று முதலிடமும், சென்னை அரைஸ் அணி 50 புள்ளிகள் பெற்று 2 ஆவது இடமும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com