குழந்தைகள் காப்பக நிர்வாகிகளுக்கான பயிலரங்கு

குழந்தைகள் காப்பக நிர்வாகிகளுக்கான பயிலரங்கு, திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் காப்பக நிர்வாகிகளுக்கான பயிலரங்கு, திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில், பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு குழந்தை பாதுகாப்பு மற்றும் தனிநபர் கவனிப்பு படிவம் தயார் செய்தல் குறித்த ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது. பயிலரங்கைத் தொடங்கி வைத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவு பெற்ற 86 குழந்தைகள் இல்லங்கள் உள்ளன. 3,086 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காப்பகங்களை நிர்வகிப்பவர்கள் மிகுந்த பாசத்துடனும், குழந்தைகள் மீது அக்கறையுடனும் செயல்பட வேண்டும். அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு அனுமதி பெற்று நடத்த வேண்டும். முறையாக பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் எண் பெறுவது மிக முக்கியம். அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாவலர் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். காப்பகங்களிலேயே ஆதார் முகாம் நடத்தி இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குழந்தைகளின் சுகாதாரம், கல்வி, தனித்திறன் மேம்பாடு, நல்ல பழக்கவழங்கள் கற்பித்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி ஏ.ராமலிங்கம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த் ஆகியோரும் பேசினர். பாதுகாப்பு அலுவலர் கார்த்திகா, சமூகப்பணியாளர் ஜான்சிராணி, பாதுகாப்பு அலுவலர் ஜெயசீலன், கணக்காளர் சந்திரகலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com