நெல்லை மாவட்டத்தில் 32 இடங்களில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமின்போது செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கன்றுகளுக்கான பரிசும் வழங்கப்படும். முகாம் நடைபெறும் தேதி மற்றும் ஊர்களின் விவரம்:
நான்குனேரி ஒன்றியத்துக்குள்பட்ட எஸ்.ஆர்.புரத்தில் வரும் 4ஆம் தேதியும், ராதாபுரம் ஒன்றியம் குட்டம், கடையநல்லூர் ஒன்றியம் காசிதர்மம் ஆகிய இடங்களில் டிச.5 ஆம் தேதியும், ராதாபுரம் ஒன்றியம் கோட்டை கருங்குளம், ஆலங்குளம் குறிச்சான்பட்டி ஆகிய இடங்களில் டிச.6ஆம் தேதியும், களக்காடு ஒன்றியம் டோனாவூர், தென்காசி ஒன்றியம் கோட்டைதிரடு, ஆலங்குளம் ஒன்றியம் குருவன்கோட்டை ஆகிய இடங்களில் டிச.7ஆம் தேதியும் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
களக்காடு ஒன்றியம், திருக்குறுங்குடியில் டிச.8 ஆம் தேதியும், சேரன்மகாதேவி ஒன்றியம் பொட்டல், தென்காசி ஒன்றியம் ஜமீன்வல்லம் ஆகிய இடங்களில் டிச.9ஆம் தேதியும், சேரன்மகாதேவி ஒன்றியம், உப்பூரணி, ஆலங்குளம் ஒன்றியம் அய்யனார்குளம் ஆகிய பகுதிகளில் டிச.12ஆம் தேதியும், வள்ளியூர் ஒன்றியம் கலந்தபனையில் டிச.13ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் ஒன்றியம், வடமலை சமுத்திரத்தில் டிச.14ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் ஒன்றியம், ரெங்கசமுத்திரத்தில் டிச.16ஆம் தேதியும், கடையம் ஒன்றியம் தாட்டான்பட்டி, கீழப்பாவூர் ஒன்றியம் முத்துகிருஷ்ணபேரி, கடையநல்லூர் ஒன்றியம் ஆவுடையாள்புரம் ஆகிய இடங்களில் டிச.19ஆம் தேதியும் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெருகிறது.
கடையம் ஒன்றியம் சிவநாடானூரில் டிச.20 ஆம் தேதியும், சங்கரலிங்கபுரத்தில் டிச.21ஆம் தேதியும், கடையநல்லூர் ஒன்றியம் ராமேசுவரத்தில் டிச.22 ஆம் தேதியும், பாப்பாக்குடி ஒன்றியம் அத்தாளநல்லூரில் டிச.23 ஆம் தேதியும், உடையாம்புளி , செங்கோட்டை ஒன்றியம் அச்சன்புதூர் ஆகிய இடங்களில் டிச.26 ஆம் தேதியும், பாப்பாக்குடி ஒன்றியம் இலந்தைகுளத்தில் டிச.27 ஆம் தேதியும், மேலகுத்தபாஞ்சான், செங்கோட்டை ஒன்றியம் கற்குடி ஆகிய இடங்களில் டிச.28 ஆம் தேதியும், பாப்பாக்குடி ஒன்றியம் திருப்புடைமருதூர், கீழப்பாவூர் ஒன்றியம் வரகுருநாதபுரம், தென்காசி ஒன்றியம் புல்லுக்கட்டு வலசை ஆகிய இடங்களில் டிச.29ஆம் தேதியும் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com