உதவி வன பாதுகாவலர் பதவிக்கான தேர்வு: 967 பேர் பங்கேற்பு

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி வன பாதுகாவலர் பதவிக்கான தேர்வை, 967 பேர் எழுதினர்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி வன பாதுகாவலர் பதவிக்கான தேர்வை, 967 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், உதவி வன பாதுகாவலர் பதவிக்கான போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் 2 மையங்கள், மேக்தலீன் மெட்ரிக் பள்ளியில் 2 மையங்கள், சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளி, தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
மாவட்டத்தில் 1,710 பேர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில், தேர்வில் 967 பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வில் 743 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்கள் விடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு எழுதுவோருக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. தூய யோவான் மேல்நிலைப் பள்ளி மையத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வட்டாட்சியர் தங்கராஜ், அதிகாரிகள் உடனிருந்தனர்.
இத்தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களிலிருந்து புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com