குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் வெள்ளாடு வளர்ப்பு: கால்நடை மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் சு. திலகர்

வெள்ளாடு வளர்ப்பு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும்  என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சு. திலகர் தெரி வித்தார்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் வெள்ளாடு வளர்ப்பு: கால்நடை மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் சு. திலகர்

வெள்ளாடு வளர்ப்பு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும்  என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சு. திலகர் தெரி வித்தார்.
தமிழக அரசின் கன்னி மற்றும் கொடு ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், வெள்ளாடு வளர்ப்பின் மேலாண்மை தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் பண்ணையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி அரங்கு திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து துணைவேந்தர் சு. திலகர் பேசியது: பசு, எருமை போன்ற கால்நடைகளை வளர்க்க முடியாத சூழலில்கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும், வெள்ளாடுகளை மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில்கூட வளர்க்கலாம். எனவேதான் வெள்ளாடுகளை ஏழைகளின் பசு மற்றும் ஏழைகளின் ஏடிஎம் எனவும் அழைக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் கிராமம் மற்றும் நகர்புறங்களில் ஆட்டிறைச்சித் தேவை அதிகரித்து வருவதால், சிறிய மற்றும் பகுதி நேர விவசாயிகளின் ஆடுவளர்ப்பு மேற்கொள்வதன் மூலம் வியாபாரரீதியாக நல்ல லாபம் ஈட்ட முடியும். மேலும், கொட்டகைகளுக்கான முதலீடும் பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் விவசாயத்துடன் ஒருங்கிணைந்து ஆடு வளர்ப்பை மேற்கொள்ளலாம். அரசின் மானிய உதவி, வங்கிக் கடன் உள்ளிட்டவற்றையும் பெறலாம் என்றார் அவர்.
திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சு. வசந்தகுமார் பேசியது: வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு. வெள்ளாடுகள் மிக்குறைந்த காலத்தில் (10-12 மாதங்களில்) பருவ வயதை அடைந்துவிடும். 16, 17ஆவது மாதங்களில் குட்டி ஈன்று விடும்.    ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருள்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.
ஆட்டிறைச்சி குளிர்ச்சி மற்றும் மென்று உண்பதில் எளிதாகையால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது.   பசும்பாலைவிட வெள்ளாட்டுப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. கொழுப்பு திரள் குறைவு. இதில் ஏதும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை.  
செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும்போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பம் பகுதிகளுக்கு வெள்ளாடுகள் ஏற்றவை. ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.  கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் பொருள்கள் சம்பந்தமான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த ஆடு வளர்ப்பு பெரிதும் உதவி புரிகிறது என்றார் அவர்.
கல்லூரி முதல்வர் சு. திருநாவுக்கரசு, வெள்ளாடு வளர்ப்பு புத்தகங்களை வெளியிட்டு பேசினார். கால்நடை உற்பத்த மேலாண்மைத் துறைத் தலைவர் மு. முருகன், கால்நடை பண்ணை வளாக பேராசிரியர் எட்வின் உள்ளிட்ட பலர் பேசினர். இந்தப் பயிற்சியில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com