நெல்லை காய்கறி சந்தைகளில் கத்தரிக்காய் விலை கடும் உயர்வு

திருநெல்வேலி காய்கறி சந்தைகளில் கத்தரிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நெல்லை காய்கறி சந்தைகளில் கத்தரிக்காய் விலை கடும் உயர்வு

திருநெல்வேலி காய்கறி சந்தைகளில் கத்தரிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் தோட்டப் பயிர்களில் தென்னை, மா, எலுமிச்சை, கத்தரி, தக்காளி, பல்லாரி உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பாவூர்சத்திரம், ஆலங்குளம்,  தென்காசி, புளியங்குடி, சிவகிரி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் கத்தரி, தக்காளி, பல்லாரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படுபவை உள்மாவட்டங்களுக்கு மட்டுமன்றி கேரள பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நிகழாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தோட்டங்களில் உள்ள கிணறுகள் வறண்டு காய்கனி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி உழவர்சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோவுக்கு): கத்தரி-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.50, தக்காளி-ரூ.32, அவரைக்காய்-ரூ.44, கொத்தவரை-ரூ.40, புடலங்காய்-ரூ.18, பாகற்காய்-ரூ. 44, பீர்க்கங்காய்-ரூ.20, சுரைக்காய்-ரூ.12, தடியங்காய்-ரூ.12, பூசணிக்காய்-ரூ.18, மாங்காய்-ரூ.35, மிளகாய்-ரூ.22, முள்ளங்கி-ரூ.14, சேனைக்கிழங்கு-ரூ.30, கருணைக்கிழங்கு-ரூ.30, சேம்பு-ரூ.24, சிறுகிழங்கு-ரூ.40, தேங்காய்-35  இஞ்சி-ரூ.36, உருளைக்கிழங்கு-ரூ.18, கேரட்-ரூ.22, பீட்ரூட்-ரூ.18, முட்டைகோஸ்-ரூ.12, சவ்சவ்-ரூ.26, ரிங்பீன்ஸ்-ரூ.62, காலிபிளவர்-ரூ.25, பூண்டு-ரூ.100., பல்லாரி- ரூ.14, சின்ன வெங்காயம்-ரூ.40.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கத்தரிக்காய், தக்காளி, தேங்காய் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாசி, பங்குனி மாதங்களில் சுபமுகூர்த்தம் மற்றும் கோயில் விழாக்கள் அதிகம் நடைபெறும். இந்த நேரத்தில் காய்கறிகளின் தேவை அதிகமிருக்கும். மகசூல் போதிய அளவு இல்லாததால் உள்ளூர் தோட்டங்களில் இருந்து வரத்து 80 சதவீதம் குறைந்துள்ளது.
மதுரை, ஓசூர், சென்னை சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளுக்கு போக்குவரத்துச் செலவு காரணமாக விலை அதிகம் உள்ளது. இன்னும் இரு வாரங்களுக்கு இந்த விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com