நெல்லையில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தியாகராஜநகரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தியாகராஜநகரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரிய தொழிலாளர்களுக்கு 1-12-2015 முதல் வழங்க வேண்டிய புதிய ஊதிய உயர்வை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்தங்களின்படி 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
 களப்பணியாளர்களுக்கு வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு புறம்பாக பணி ஒதுக்கீடு செய்து தொழிலாளர்களை வேலை வாங்குவதை நிறுத்த வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மின்வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மின்வாரிய தொழிலாளர்களுக்கும் ஓய்வுபெரும் வயதை ஒரே சீராக 60 வயது என நிர்ணயிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மின்சார வாரியங்கள் பொதுத்துறையாகவே நீடித்திடும் வகையிலும், தனியார் முதலீடுகளைத் தவிர்த்திடும் வகையிலும் மத்திய-மாநில அரசுகளின் கொள்கைகள் அமைந்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத் தலைவர் பி.கண்ணன் தலைமை வகித்தார். திட்டச் செயலர் கே.கே.பெருமாள்சாமி, உற்பத்தி வட்டச் செயலர் பி.செல்லத்துரை, திட்டப் பொருளாளர் எம்.கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் பி.சுடலை உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். எஸ்.பூல்ராஜ், எம்.முகம்மதுஇஸ்மாயில், ஆர்.முருகேசன், டி.ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com