புதிய பேருந்து நிலைய கடைகளில் 5 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் 5 கிலோ கலப்பட தேயிலையை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் 5 கிலோ கலப்பட தேயிலையை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் காளிமுத்து, ரமேஷ், முத்துக்குமார், கிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் விதிமுறைகளை மீறி எண்ணெய் பலகாரங்கள் திறந்தவெளியிலும், செய்தித்தாள் காகிதங்களின் மீதும் வைக்கப்பட்டு விற்பனை செய்வது தெரியவந்ததாம். அவற்றை கடைக்காரர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்து அளித்தனர். இதுதவிர சாயம் சேர்க்கப்பட்ட 5 கிலோ கலப்பட தேயிலையும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவின் பாலகத்தில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான 23 தயிர் பாக்கெட்டுகள், பிற கடைகளில் இருந்த 20 தண்ணீர் பாக்கெட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,   எண்ணெய் பலகாரங்களை கண்ணாடி பெட்டிக்குள் வாழை இலையை விரித்து அதன்மேல் வைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமீறி கலப்பட பொருள்கள், காலாவதியான பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 26 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com