நெல்லை நயினார்குளத்தில் தூய்மைப் பணி

திருநெல்வேலி நயினார்குளத்தில் தன்னார்வ அமைப்புகள், மாணவர்கள் ஆகியோர் புதன்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி நயினார்குளத்தில் தன்னார்வ அமைப்புகள், மாணவர்கள் ஆகியோர் புதன்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
 அகத்தியமலை இயற்கை வள காப்பு மையம் (ஏ ட்ரீ), மணிமுத்தாறுநெல்லை இயற்கை சங்கம், ரோட்டரி சங்கம், தாமிரவருணி உபவடிநிலக் கோட்டம், பொதுப்பணித்துறை ஆகியவை சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி திருநெல்வேலி நயினார்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
 ஆட்சியர் மு.கருணாகரன் பணிகளைத் தொடங்கிவைத்தார். பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் ஆர்.சிவக்குமார், வான்பொருநை திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரான்சிஸ்ராஜ், ஏ ட்ரீ ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் குளத்தில் கையுறைகளுடன் இறங்கி பிளாஸ்டிக் கழிவகளைச் சேகரித்து அப்புறப்படுத்தினர்.
 இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், தாமிரவருணி உபவடிநில கோட்டத்தில் 786 முறைப்படுத்தப்பட்ட பாசனக்குளங்களும், 601 முறைப்படுத்தப்படாத பாசனக்குளங்களும் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்பு போன்றவற்றால் குளங்கள் மாசுபடுகின்றன. இதனால் நீர்ப்பிடிப்புத்திறன், நீரின் தரம், நிலத்தடிநீர் மறுஉற்பத்தி வெகுவாகக் குறைகிறது. ஆகவே, பாசனக்குளங்களை அழிவில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக தூய்மைப்பணி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இப் பணிக்கு முழுஆதரவு அளிக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com