நெல்லையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்: ஹெச்.சி.எல். மென்பொருள் நிறுவனம் பங்கேற்பு

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஹெச்.சி.எல். மென்பொருள் நிறுவனம் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஹெச்.சி.எல். மென்பொருள் நிறுவனம் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், ஹெச்.சி.எல். மென்பொருள் நிறுவனம் பங்கேற்க உள்ளது. 2014 முதல் 2016ஆம் ஆண்டுகளில் 85 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் பங்கேற்கலாம். பிளஸ் 2இல் கணிதம் அல்லது வணிகக் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்-லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட 3 வகையான தேர்வு நடத்தப்படும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு மதுரையில் ஓராண்டு கணினிப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ. 3,500 உதவித்தொகை வழங்கப்படும். தங்குவதற்கும் உணவுக்கும் குறைந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். பயிற்சி முடித்தோருக்கு மாதம் ரூ. 15 ஊதியத்தில் வேலை வழங்கப்படும். குறைந்தது 2 ஆண்டுகளாவது இந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்.
இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரத்து செய்யப்படாது. விருப்பமுள்ளோர் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com