சாலைப் பணியாளர்கள் நூதன போராட்டம்

பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பாளை.யில் சாலைப் பணியாளர்கள் முக்காடு அணிந்து வெள்ளிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பாளை.யில் சாலைப் பணியாளர்கள் முக்காடு அணிந்து வெள்ளிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும்; பணிநீக்க காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும்;  நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் கருப்புத் துணியால் முக்காடு அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். குருசாமி தலைமை வகித்தார். பி. அருண்மணிஞானையா (தூத்துக்குடி), எம். முகம்மதுமுஸ்தா (கன்னியாகுமரி), பி. முத்துராமலிங்கம் (விருதுநகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.கே. குமாரவேல் தொடங்கிவைத்தார். அமைப்பின் மாநிலச் செயலர்கள் டி. கிளாட்வின், செ. செய்யதுயூசுப், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வீ. பார்த்தசாரதி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கலையரசன், மாவட்டச் செயலர் க. துரைசிங், பொதுப்பணித்துறை பணியாளர் சங்க பொதுச்செயலர் கோமதிநாயகம், வணிகவரித்துறை பணியாளர் சங்கச் செயலர் கே. கற்பகம், நெடுஞ்சாலை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். கணபதி மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com