தாமிரவருணியை பாதுகாக்கக் கோரி ஜூலை 2, 3 இல் விழிப்புணர்வுப் பேரணி: பாமக இளைஞரணி முடிவு

தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஜூலை 2, 3 ஆம் தேதிகளில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவதென

தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஜூலை 2, 3 ஆம் தேதிகளில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவதென திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட பாமக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநில இளைஞரணி துணைச் செயலர் செல்வின்சுரேஷ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் செந்தில், மாநில துணைப்பொதுச்செயலர்கள் திருமலைகுமாரசாமி, இசக்கிமுத்து, மாநிலத் தலைவர்கள் சு. பிச்சையாபாண்டியன், அய்யம்பெருமாள், மாவட்டத் தலைவர் சீயோன் தங்கராஜ், மாவட்டச் செயலர் சீதாராமன், துணைத் தலைவர் பி.கே. ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணிச் செயலர் கோமதிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்புச் செயலர் அந்தோணிராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நம்பிசங்கர், மாநில தொண்டரணிச் செயலர் கனல்கந்தன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலர் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: திருநெல்வேலி மாவட்டத்தில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வேண்டும் என வலிறுத்தி வரும் ஜூலை 2, 3 ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com