கால்வாய்களில் அமலைச் செடி ஆக்கிரமிப்பால் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை: விவசாயிகள் புகார்

கால்வாய்களில் அமலைச் செடி ஆக்கிரமிப்பால் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கால்வாய்களில் அமலைச் செடி ஆக்கிரமிப்பால் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாமிரவருணிப் பாசனத்தில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பிசான பருவ சாகுபடி பணி தீவிரமடைந்துள்ள நிலையில் கடைமடைகளுக்கு தண்ணீர் எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
முறையாக மராமத்துப் பணி மேற்கொள்ளாதது, பெருமளவில் அமலை, காட்டாமணக்கு செடி ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால் கால்வாய்களில் நீரோட்டம் செல்வதில் தடை உள்ளது. இதனால், கடை மடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 
இதனிடையே,  விவசாயிகள் தங்களது சொந்த செலவில் அமலைச் செடி அகற்றும் பணி மேற்கொண்டுள்ளனர். பாளையம் கால்வாயில் அமலைச்செடிகளை நான்குனேரி பேரவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் உதவியுடன் அகற்றுகின்றனர்.
புதன்கிழமை பாளையம் கால்வாயில் முருகன்குறிச்சி பாலத்தில் தேங்கியிருந்த அமலைச் செடிகளை 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அகற்றினர். அப்போது விவசாயி ஒருவர் கூறியது: கால்வாய்களில் தண்ணீர் அடைப்புக் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அமலைச் செடியை அகற்றி மராமத்துப் பணி மேற்கொள்வது வழக்கம். சில ஆண்டுகளாக இப்பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அமலைச் செடி ஆக்கிரமித்து பாசனத்துக்கு தண்ணீர் செல்வதில்லை; பாசன மடைகளும் தூர்ந்துவிட்டன. வரும் காலங்களில் பாசனக் கால்வாய்களில் முழு அளவில் மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com