"சுகாதாரப் பணிகளில் மெத்தனம் காட்டினால் நடவடிக்கை'

சுகாதாரப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் கோ. பிரகாஷ் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் கோ. பிரகாஷ் குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், ஒருங்கிணைந்த கணினிமயமாக்கல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதாரப் பணிகள் குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார் கோ.பிரகாஷ் . அப்போது, அவர் பேசியது:
திருநெல்வேலி மாநகராட்சியை சுகாதாரமான மாநகராட்சியாக மாற்றுவது அதிகாரிகளின் முழு அர்ப்பணிப்பு, சுகாதார அலுவலர்களின் நடவடிக்கையில்தான் உள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அறிவுறுத்தலுக்கேற்ப, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும்  தூய்மை இந்தியா திட்டமான திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
புதன்கிழமைதோறும் பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டாலும், தினமும் மேற்கொள்ளும் பணிகளில் தொய்வு ஏற்படக் கூடாது. சுகாதாரப் பணியாளர்கள் தங்களுக்கு நிர்ணயித்துள்ள 250 வீடுகளிலும் குப்பைகள் பெறுகின்றனரா என்பது குறித்து உதவி ஆணையர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் வார்டு வாரியாக தனியார் கட்டடங்கள்,  கல்லூரிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நகரைச் சுற்றியுள்ள கிணறுகள், நீர்வரத்துக் கால்வாய்கள், குளங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளையும் தீவிர கண்காணிப்பில் வைக்க வேண்டும். சுகாதாரப் பணிகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலட்சியம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ஆட்சியர் பேசியது: மாநகராட்சி சுகாதாரப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தெருக்களில் உள்ள குப்பைதொட்டிகள் நிரம்பி வழியாமல் கண்காணிக்க வேண்டும். நீர்வரத்துக் கால்வாய்களில் அடைப்பு உள்ளனவா என்பதை  கண்காணித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில்,  உதவி ஆட்சியர் (பயிற்சி) க. இளம்பகவத், மாநகரப் பொறியாளர் நாராயணன் நாயர், மாநகர சுகாதார அலுவலர் பொற்செல்வன், உதவி ஆணையர்கள் கீதா, கவிதா, வசந்தராஜன், சுப்புலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். பின்னர், ராமையன்பட்டியில் அறிவியல் முறையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நிர்வாக ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com