தூய சவேரியார் பேராலய திருவிழா நாளை தொடக்கம்

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பாளையங்கோட்டையில் உள்ள பழமைவாய்ந்த தூய சவேரியார் பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் வெள்ளிக்கிழமை (நவ. 24) மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறைவட்டார அதிபர் அல்போன்ஸ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அதன்பின்பு தினமும் மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெற உள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி மாலையில் திருப்பலியும், சவேரியார் திருவுருவப் பவனியும் நடைபெற உள்ளது. 3 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் சிறப்புத் திருப்பலியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆ.ஜூடு பால்ராஜ் பங்கேற்று மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து முதல் நற்கருணை அருட்சாதனம் சிறுவர்-சிறுமியருக்கு வழங்கப்பட உள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஆயர் ஆ.ஜூடு பால்ராஜ் தலைமையில் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தைகள் எப்.எக்ஸ்.ராஜேஷ், எஸ்.சேவியர், சி.எஸ்.ஜூடு மெரில், எம்.எஸ்.சலேத் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com