கடையம் கோயிலில் அதிருத்ர ஜப மஹா யாகம்

கடையம் ஸ்ரீ நித்தியகல்யாணி சமேத ஸ்ரீவில்வவனநாத சுவாமி கோயிலில் அதிருத்ர ஜப மஹா யாகம் அக். 5 முதல் அக். 11 வரை நடைபெற்றது.

கடையம் ஸ்ரீ நித்தியகல்யாணி சமேத ஸ்ரீவில்வவனநாத சுவாமி கோயிலில் அதிருத்ர ஜப மஹா யாகம் அக். 5 முதல் அக். 11 வரை நடைபெற்றது.
உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த யாகத்தையொட்டி,    அக். 4 ஆம் தேதி  அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, புண்யாகவாசனம், கோ பூஜை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், பூர்ணாஹுதியைத் தொடர்ந்து தீபாராதனையும்,   நவா வர்ண பூஜையும் நடைபெற்றது. அக். 5 ஆம் தேதி  முதல் அக். 10 வரை காலை 7 மணி முதல்  முற்பகல் 11.30 மணி வரை மஹாந்யாஸம், ஸ்ரீ ருத்ர ஜெபம், ஸ்ரீருத்ர ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.
 மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீவில்வவனநாத சுவாமிக்கு கிரமா அர்ச்சனையும், ஸ்ரீ நித்ய கல்யாணி அம்பாளுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும்,  தீபாராதனை, மந்திரபுஷ்பம், சதுர்வேதபாராயணம் ஆகியன நடைபெற்றது.  நிறைவு நாளான   புதன்கிழமை  காலை 6 மணி முதல் மஹாந்யாஸம், ஸ்ரீ ருத்ரஜபம், வஸேர்த்தாரா ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, தசதானம், கும்பம் எழுந்தருளலும், தொடர்ந்து காலை 10 மணி முதல் ஸ்ரீ ருத்ராபிஷேகம், கும்பாபிஷேகமும் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் விசேஷ அலங்காரம், புஷ்பாஞ்சலி, மஹா தீபாராதனை, வருஷாபாருட தரிசம்,  வீதி உலா மற்றும் ஸ்ரீ பைரவர் பூஜையும் நடைபெற்றது.
 இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை கடையம் பக்த ஜன சபா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com