பேட்டையில் ஜெபமாலை மாதா திருவுருவப் பவனி

பேட்டையில் புனித ஜெபமாலை மாதா திருவுருவப் பவனி  நடைபெற்றது.

பேட்டையில் புனித ஜெபமாலை மாதா திருவுருவப் பவனி  நடைபெற்றது.
பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான விழா தூத்துக்குடி லூசிய மைய இயக்குநர் கிராசியுஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. எட்டாம் திருநாளில் திருப்பலியும், சரணாலய அருள்தந்தை ஜெயபாலன் தலைமையில் நற்கருணைப் பவனியும் நடைபெற்றன.
ஒன்பதாம் திருநாளில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி முதல்வர் அருள்தந்தை பிரிட்டோ வின்சென்ட் தலைமையில் ஜெபமாலை மாதா திருவுருவப் பவனி நடைபெற்றது.  பேட்டை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து தொடங்கிய பவனியானது ரொட்டி கடை பேருந்து நிறுத்தம், காவல் நிலையம், கருங்காடு சாலை வழியாக ஆலயத்தை அடைந்தது. அப்போது பக்தர்கள் உப்பு மற்றும் மிளகு நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
பத்தாம் திருநாளில் ஆயர் இல்ல அருள்தந்தை லூர்துராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை  பங்குத்தந்தை அல்போன்ஸ் தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com