கீழநத்தம் ஊராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வடக்குப் பகுதியில் தூய்மைப் பணி, டெங்கு ஒழிப்பு முகாம் ஆகியன வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வடக்குப் பகுதியில் தூய்மைப் பணி, டெங்கு ஒழிப்பு முகாம் ஆகியன வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கே.டி.சி. நகர் வடக்கு குடியிருப்புப் பகுதியில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்,  தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டன. இப்பணியை மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா. ஆண்டாள்,  தே. வியாகப்பன்,  பணி மேற்பார்வையாளர் கோ. சிவகாமி, ஊராட்சி செயலர் அ. இசக்கிமுத்து ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com